JULY 31 - IT RETUN DEADLINE - யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 25, 2023

JULY 31 - IT RETUN DEADLINE - யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?



*JULY 31 - IT RETUN DEADLINE!*

*யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?*

PAN எண் வைத்துள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வருமான வரித்துறை நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் தங்களது வருமானம் & வரி விபரங்களைத் தனிப்பட்ட முறையில் வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தாக வேண்டும். இதற்கு IT RETURN என்று பெயர்.

2022-23 நிதியாண்டில், *வருமான வரி செலுத்தியிருந்தாலும் - செலுத்தாவிட்டாலும் தங்களது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க (IT RETUN செய்ய) 31.07.2023 இறுதி நாளாகும்.*

அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் ரூ.5,000/- அபராதம் விதிக்கப்படும். இது மற்றவர்களுக்கு எப்படியோ அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கட்டாயமாக நேர் செய்யப்பட்டுவிடும். *நான் இதுவரை IT RETURN செய்ததேயில்லையே. . . எனக்கென்ன அபராதமா விதித்தார்கள்?* என எண்ணலாம். . . .

தொழில்நுட்ப வசதி, PAN, ஆதார் இணைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்துவிட்டதால் வருங்காலங்களில் கண்காணிப்புகள் தீவிரமாகும். அபராதம் தானாக வந்து சேரும்.

--- --- ----

*எனக்குத்தான் FORM-16 வந்திருச்சே நான் ஏன் IT RETURN செய்ய வேண்டும்?* என்று தோன்றலாம். . .

FORM-16 என்பது A & B என இரு பிரிவாக இருக்கும்.

FORM-16 A என்பது ஊதியம் வழங்கும் அலுவலர் தனது TAN எண்ணில் ஊழியரிடம் இருந்து பிடித்தம் செய்து வைத்த வருமான வரித் தொகையை, வருமான வரித்துறையிடம் அவரவர் PAN எண்ணிற்கென பிரித்துச் செலுத்திவிட்டேன் என்பதைத் தெரிவிக்கும் சான்றிதழ் ஆகும்.

FORM-16 B என்பது ஊதியம் வழங்கும் அலுவலரிடம் தாங்கள் பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்த வருமான வரிப் படிவத்தில் உள்ள தரவுகளைப் பிரிவு வாரியாக உங்களது PAN எண்ணில் பதிவேற்றியதைக் குறிக்கும் சான்றிதழ் ஆகும்.

எனவே இவையிரண்டுமே ஊதிய அலுவலர் வழங்கும் சான்றிதழ். அவ்வளவே.

--- --- ---

*இந்த இரு சான்றிதழ்கள் போதாதா? மீண்டும் எதற்கு IT Return?* எனலாம். . . .

FORM 16B-ல் தனிநபரது பணித்தளத்தில் பெற்ற ஊதியம் & பிடித்தம் சார்ந்தவை அலுலரால் மட்டுமே பதிவேற்றப்படுகிறது. அவ்வாறு *பதிவேற்றப்பட்டதற்கு சார்ந்த ஊழியர் ஒப்புதல் அளிக்கிறார் என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.* மேலும், இதனுடன் தனிநபரது மற்ற பணப்பரிமாற்றங்களையும் வருமான வரித்துறையின் மென்பொருளானது தங்களது PAN எண் வழி கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும். நடப்பு ஆண்டில், வங்கிச் *சேமிப்புக் கணக்கு & வைப்புநிதி உள்ளிட்டவற்றிற்கு வரவான வட்டியானது அவரவர் PAN எண்ணில் தானாகவே பதிவேற்றப்பட்டுள்ளது.* இதற்கும் தனிநபர் ஒப்புதல் அளிக்கிறாரா என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

ஆக *பணி சார்ந்த பணப்பரிமாற்றம் & தனிப்பட்ட பணப்பரிமாற்றங்கள் என்று தனது ஒட்டுமொத்த வருமானம் - சேமிப்பு - செலவு - வரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தனது சுய நினைவோடே வருமான வரித்துறையிடம் நானே சமர்ப்பிக்கிறேன் என்ற தனிநபரின் உறுதியளிப்பை வருமான வரித்துறையானது IT Return மூலம்தான் உறுதி செய்து கொள்கிறது.*

IT Return செய்யவில்லை எனில், உங்களது வருமானத்தை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க மறுக்கிறீர் / மறைக்கிறீர் என்றே பொருள் கொள்ளப்படும். இது தண்டனைக்குரிய பொருளாதாரக் குற்றமாகும்.

எனவே, வருமான வரி கட்டியிருந்தாலும் கட்டாவிட்டாலும், FORM 16 வாங்கியிருந்தாலும் உரிய காலத்தில் நமது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க IT Return செய்வோம்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.