ஆசிரியர் சங்கத்தினருடன் நாளை கலந்துரையாடல்: பள்ளிக் கல்வித் துறை
சென்னை, ஜூலை 23: ஆசிரியர் சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்து மாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதை ஏற்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தலைமையிலான பேச்சுவார்த்தை கூட்டம் செவ் வாய்க்கிழமை (ஜூலை 25) நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைக் கலாம். ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.