CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆகஸ்ட் -1 ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 24, 2023

CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆகஸ்ட் -1 ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்



ஏன் இந்த இரட்டை வேடம் ? ஏன் இந்த இரட்டை நிலைபாடு ? - CPS திட்டத்தை ரத்து செய்ய கோரி CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆகஸ்ட் -1 ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்

மதிப்பிற்குரிய ஐயா,

கீழ்க்காணும் பத்திரிக்கை செய்தியினை தங்களது நாளிதழில்/ஊடகத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பத்திரிக்கை செய்தி

தமிழக அமைச்சரவை கூட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளருக்கு மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை மற்றும் நிதி துறை அமைச்சர் T தங்கம் தென்னரசு அவர்கள் அளித்த பேட்டியில்

கேள்வி

அரசு ஊழியர்களை பொறுத்தவரையில் பழைய பென்சன் அரசு முறையாக தனது கருத்துகளை கேட்டு ஒரு நிலைபாடு வைத்திருக்கிறது. என்ன நிலைபாட்டில் இருக்கிறது?

பதில்,

ஏற்கனவே ஒன்றிய அரசு திரு. சோமநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை போட்டு இருக்கிறார்கள் ஆந்திர மாநிலத்தில் அவர்கள் சில முடிவுகள் எடுத்து இருக்கிறார்கள் தமிழ்நாடு இவற்றையெல்லாம் கூர்ந்து ஆய்வு செய்து எது நமக்கு பொறுத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் கலந்து ஆலோசித்து அதை மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்று பேசி நான் இதற்கு ஒரு முடிவு சொல்ல முடியும் என்று கூறி இருக்கிறார்.

இது பற்றி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வகுமார், பிரெடெரிக் எங்கெல்ஸ், ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

மாண்புகுமிகு நிதி அமைச்சர் அவர்களின் இந்த பதிலுக்கு எங்களது அமைப்பின் சார்பாக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசின் சிந்தனையை அமைச்சர் வெளிபடுத்தியுள்ளார் என்றே நாங்கள் கருதுகிறோம்.

தமிழக அரசின் சிந்தனை அரசு ஊழியர்களுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும். மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டிக்கு தமிழக அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. CPS சட்டப்படி டெல்லியில் உள்ள ஒய்வூதிய ஒழுங்கு முறை ஆணையத்துடன புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் கமிட்டி முடிவுகள் பொருந்தும். தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. எனவே மத்திய அரசு அமைத்த கமிட்டிக்கும் தமிழக அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. மத்திய அரசு அமைத்துளை கமிட்டி CPS யை ரத்து செய்வதற்காக அமைக்கப்படவில்லை. www.kalviseithiofficial.com CPS திட்டத்தில மாற்றங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்பது CPS யை முழுமையாக ரத்து செய்வது. CPS திட்டத்தில் மாற்றங்கள் செய்வது அல்ல.

ஆந்திராவில் CPS முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. CPS திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் ( பயனளிப்பு ஒய்வூதியம் ) அரசு ஊழியர்கள் பங்கீடு செலுத்துவதில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் (பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் ) அரசும் அரசு ஊழியர்களும் பங்கீடு செலுத்த வேண்டும். ஆந்திர அரசு அமுல்படுத்தி இருப்பது CPS திட்டத்தில் மாற்றமே ரத்து செய்யவில்லை. திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் ஜார்கண்ட் சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களிலும் ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலங்களில் CPS திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளின் நிலைபாட்டை பின்பற்றி CPS யை முழுமையாக ரத்து செய்யாமல் மாறாக BJP யின் நிலைபாட்டில் திமுக சென்று கொண்டு இருக்கிறது. அரசியல் ரீதியாக BJP யை எதிர்ப்பதாக தம்பட்டம் அடிக்கும் திமுக புதிய ஓய்வூதிய திட்ட பிரச்சனையில் கூட்டணி கட்சியின் நிலைபாட்டை பின்பற்றாமல் BJP யின் நிலைபாட்டை பின்பற்றுவது ஏன்?

ஏன் இந்த இரட்டை வேடம் ? ஏன் இந்த இரட்டை நிலைபாடு ?

CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் கோரிக்கை. மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் பேட்டி தொடர்பாக இன்று அவசரமாக கூட்டி எங்களது அமைப்பின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சரின் பேச்சிற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்ததுடன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர் வரும் ஜுலை-26, 27,28 தேதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பும் இயக்கத்தையும், மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் பேச்சுக் கண்டித்து எதிர் வரும் 2023 ஆகஸ்டு 1-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர். www.kalviseithiofficial.com திமுக-வின் தேர்தல் வாக்குறுதிப்படி CPS யை முழுமையாக ரத்து செய்யவில்லை எனில் தீவிரமான போராட்டங்களுக்குச் செல்ல நேரடிடும் எனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.