இரட்டை வேடம் போடும் தி.மு.க., அரசு - சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சாடல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 27, 2023

இரட்டை வேடம் போடும் தி.மு.க., அரசு - சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சாடல்

இரட்டை வேடம் போடும் தி.மு.க., அரசு - சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சாடல்





இரட்டை வேடம் போடும் தி.மு.க., அரசு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சாடல்

சி.பி.எஸ்., (புதிய ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பில் தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுகிறது,'' என, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், பிரெடரிக் எங்கெல்ஸ், ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சி.பி.எஸ்., தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள சோமநாதன் தலைமையிலான கமிட்டிக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை

சி.பி.எஸ்., சட்டப்படி டில்லியில் உள்ள ஓய்வூதிய ஒழுங்கு முறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் கமிட்டி எடுக்கும் முடிவுகள் பொருந்தும். தமிழக அரசு 20 ஆண்டுகளாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும் இக்கமிட்டி சி.பி.எஸ்.,ஐ ரத்து செய்வதற்காக அமைக்கப்படவில்லை. சி.பி.எஸ்., திட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதி என்பது சி.பி.எஸ்.,ஐ முழுமையாக ரத்து செய்வது தான். அதில் மாற்றங்கள் செய்வது அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கீடு செலுத்துவதில்லை. சி.பி.எஸ்., எனும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசும், ஊழியர்களும் பங்கீடு செலுத்த வேண்டும். ஆந்திர அரசு அமல்படுத்தி இருப்பது சி.பி.எஸ்., திட்டத்தில் மாற்றமே தவிர ரத்து செய்யவில்லை.

தி.மு.க.,வின் கூட்டணியான காங்., கட்சி ஆளும் ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும் சி.பி.எஸ்., திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்., ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு. இதை வலியுறுத்தி (ஜூலை 26, 27, 28) முதல்வர் ஸ்டாலினுக்கு மின் அஞ்சல் அனுப்ப உள்ளோம். ஆக., 1 மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.