ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அவசர சட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை - தேதி: 28.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 28, 2023

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அவசர சட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை - தேதி: 28.06.2023



Security Ordinance for Teachers - Tamil Nadu Government Employees Teachers Welfare Association Request - Date: 28.06.2023 - ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அவசர சட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை - தேதி: 28.06.2023

ஊடக மற்றும் பத்திரிக்கை செய்தி

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - கோரிக்கை தமிழ்நாட்டில் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. அதில் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். இப்போது உள்ள சூழலில் ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்கால நலன் கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. மாணவர்களை கட்டுப்படுத்தும் போது பொது மக்களாலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்கள் தாக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது . இந்நிலையை அறிந்து மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனே கொண்டுவரவேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டம் எடங்குடி என்ற இடத்தில் திருச்சிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த ஆசிரியர் வாஞ்சிநாதன் அவர்களை அவரிடம் படித்த முன்னாள் மாணவன் ஜேம்ஸ்பாண்டியன், நான்கு வருடத்திற்கு முன்பு கண்டித்து படிக்கவைத்துள்ளார், கண்டித்தார் என்பதற்காக பேருந்திற்காக காத்துருந்த ஆசிரியரை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தை காணும்போது நெஞ்சு பதை பதைக்கிறது. இந்த சம்பவத்தால் ஆசிரியர்கள் நமக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் உள்ளனர். மாணவர்களை நல் வழிப்படுத்தி ஒழுக்கத்தை கடை பிடித்து பயிலவைக்க ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு சட்டமும் அவசியம். ஆதலால் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உடனே கொண்டுவரவேண்டும் மாவணவர்கள் தற்போது பெற்றோர்கள் கட்டுப்பாடிலும் இல்லை ஆசிரியர்கள் கட்டுப்பாட்டிலும் இல்லை முழுக்க முழுக்க கைபேசி கட்டுப்பாட்டில் இருக்கின்றார் ஆதலால் கைபேசியில் பாடம் நடத்துவற்கும் வீட்டுப்பாடம் கொடுப்பதற்கும் தடை செய்து மாணவர்களை கைபேசியில் இருந்து படியில் இருந்து விடுவித்தால் மட்டுமே பழக்கவழக்கம் மாறும் மாணவர்கள் இயல்பு இருக்க திரும்புவார்கள் ,ஆதலால் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டதை கொண்டுவரவேண்டும் மற்றும் கைபேசியில் படம். நடத்துவதற்கு தடைவித்து மாணவர்கள் நலன் காக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.