ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 27, 2023

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.



Provision of in-service training to teachers depends on – SCERT directorate processes. - ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.... 6th , 7th , 8th Std Tamil Teachers Workshop

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-06.

ந.க.எண்.6400/F4/2023 நாள் 2106.2023.

பொருள் 6, 7, 8 ஆம் வகுப்பு தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு- திறன்வளர்ப் பயிற்சி வழங்குதல் - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை விடுவித்தல்- பணிமனை ஏற்பாடுசெய்தல் - பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக.

பார்வை

இந்திறுவன இயக்குநரின் கூட்ட நாள்: 01.06.2023 2024-2025 ஆம் கல்வியாண்டில் 6,75 8 ஆம் வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மைய கற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்பணிமனையில் உயர் தொடக்க நிலை வகுப்பறைகளுக்கான (C. 7 மற்றும் 8) தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன்வளர்ப் பயிற்சியை அணிப்பதற்காக பணிமனை ஜீலை 03 முதல் 07 வரை காரல்கீயூபல் (KarakKubel) பயிற்சி மையம் ஆணைக்கட்டி, கோயம்புத்தூரில் நடைபெறுவதால் இணைப்பு பட்டியலில் உள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இப்பணிமனைலை சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் அழைப்பாளராகவும் (Covener) கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் ஒருங்கிணைந்து நடத்துமாறும். கோத்தகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் இப்பணிமனைக்கான செலவினத்தை திட்ட மற்றும் செயல்பாடுகள் நிதியிலிருந்து (Programme& Acthvities Fund) மேற்கொள்ளுமாறும்.

கோத்தகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலிருந்து ஒரு இளநிலை உதவியாளர் 7 உதவியாளரை பணிமனைக்கு அனுப்பி செலவினங்களை மேற்கொண்டு அால் ரசீதுகளைப் பெறவும், பணிமனையை ஆவணப்படுத்தி அதன் ஒரு நகலை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு உடனடியாக அனுப்பவும் மேலும் ஆவணப்படுத்துதலுக்கு சதுவாக ஒரு முதுநிலை விரிவுரையாளர் 1 விரிவுரையாளரைப் பணிவிடுவிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இப்பணிமனையில் கலந்து கொள்பவர்கள் 02.07.2023 அன்று மாலை 6 மணிக்குள் பணிமனை மையத்தை சென்றடைவதற்கு எதுவாக பங்கேற்பாளர்கள் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணிமனை மையம், மைய விபரம் பற்றிய உதவிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருமதி கிரிஸ்டல் ஜெயா (9865287883) மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருமதி கற்பகம் (8903219781) ஆகியோரைத் தொடர்பு கொள்வதற்கும். இப்பயிற்சிக்கான ஒருங்கிணைப்புப் இந்நிறுவன விரிவுரையாளர் பணிகளை மேற்கொள்ளுமாறும் முனைவர் திருமதி பா.ஆனந்தி என்பாரை நியமித்து ஆணையிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD SCERT இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.