Regarding CPS to GPF - தமிழக கள நிலவரம் -2003 முதல் 2023 வரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 27, 2023

Regarding CPS to GPF - தமிழக கள நிலவரம் -2003 முதல் 2023 வரை

Regarding CPS to GPF - தமிழக கள நிலவரம் -2003 முதல் 2023 வரை

பல ஆட்சிகள் மாற்றம்... பல தலைவர்கள் - 2003 முதல் 2023 வரை 20 ஆண்டுகள் - நம்மை கேள்விக் குறியோடு - பழைய ஓய்வூதியத் திட்டம் - GPF - மீண்டும் கிடைக்கப் பெறுமா என இலவு காத்த கிளியாக காக்க வைத்து - வெறுமையுடன்  கடந்து வந்திருக்கிறோம்... 

2003 இல் - அன்றைய ஜெ அரசால் - கோபத்தில் - பல லட்சம் அரசு ஊழியர்களை - எஸ்மா டெஸ்மா மூலம் பணி இடைநீக்கம் செய்து - அரசை எதிர்த்த மாநில அரசு  ஊழியர்களது போராட்டங்களை ஒடுக்கிய சூட்டில் - இன்னும் அவர்களது உரிமைகளை பறிக்கத் திட்டமிட்டது.  உலக வங்கி - மாநிலங்களுக்கு கடன் வழங்கும் போது - ஓய்வூதிய நிதியால் தான் செலவினம் அதிகம். அதை NPS/CPS என மாற்றினால் கடன் தருவோம் என வற்புறுத்திய போது - Rajya Sabha வில் NPS Bill - 1.1.2004 இல் மத்திய அரசால் சட்டமாக்க மத்திய அரசு தயாரானது.

ஆனால் - மாநில அரசு ஊழியர்களது தொடர் போராட்டங்களால் - கடும் கோபம் கொண்ட - ஜெ அரசு -  1.4.2003 முதல்  GPF(பழைய ஓய்வூதியத் திட்டம்) ஐ - CPS (Contribution Pension Scheme) என்று மாற்றம் செய்து  - மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பாக  -  9 மாதங்களுக்கு முன்பே - தமிழக அரசு ஊழியர்கள் + ஆசிரியர்களுக்கு  - CPS அமலானது.

  கொடுங்கோன்மையால்  வஞ்சிக்கப்பட்டோம் அடுத்தடுத்து அமைந்த அனைத்து ஆட்சிகளாலும். 20 ஆண்டுகளாக - 2 தமிழக முதன்மை கட்சிகளும் (திமுக, அதிமுக) - ஆளும் 5 ஆண்டுகளில் - GPF கொண்டு வராமல் - தேர்தல் பிரச்சாரம் + தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமே - அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த வெற்றிக்கு பயன்படுத்தினர்.  2015 கடைசி தின - சட்டமன்ற பரப்புரையில் - ஜெ அவர்கள் ஜோலார்பேட்டையில் (திமுக தேர்தல் வாக்குறுதியாக தந்ததால்)- GPF கொண்டு வருவதாக அறிவித்தார் ஜெ. ஆனால் ஆட்சி அமைந்தும் - GPF அமல்படுத்தவில்லை. கலைஞர், ஜெ உட்பட பெரிய தலைவர்களே - கைவிரித்த நிலையில் - செய்வோம் என காலம் தாழ்த்திய நிலையில் - OPS, EPS என எவரும் CPS ஐ கண்டு கொள்ளவே இல்லை. 

10 ஆண்டுகளாக அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக - மீண்டும் தேர்தல் வாக்குறுதியாக -2021 தேர்தல்  பரப்புரையில்  GPF ஐ - நமக்கு  தருவதாக - அறிவித்தது. 

மனமுவந்து வாக்களித்தோம். திமுக நிச்சயம் நமது GPF கோரிக்கையை நிறைவேற்றும் ஊழியர்கள் என 100% நம்பினோம். வெற்றி பெற்றது  திமுக அரசு ஊழியர்கள் + ஆசிரியர்கள் அமோக ஆதரவுடன் (2015 இல் திமுக அதிமுகவிடம் - ஆட்சியை இழந்தது வெறும் 1% தபால் வாக்குகளால் தான் என்பது வரலாறு). ஆனால் GPF பெரும் கோரிக்கை இன்னும் கிடப்பில்... 

கலைஞர் போல் ஜெ போல் ஆட்சிக்கு வந்ததும் - GPF அமல் செய்ய -  முதல் கையெழுத்திட்டு - வரலாற்றில் இடம் பெறாமல் - ஏனோ காலம் தாழ்த்துகிறது தற்போதைய தமிழக அரசு. அவசரம் என்ன என - MP தேர்தல்  - மே 2024 & சட்டமன்ற தேர்தல் - மே 2026 என காலம் தள்ளி கணக்கு போட்டிருக்கலாம். 

ஆனால் வட மாநில தேர்தல் + GPF நிலவரம் வேறாக உள்ளது.
Jharkhand, Chattisgarh, Punjab, Himachal, Rajasthan  என NPS இல் இணைந்து - மத்திய அரசின் கணக்கில் ஓய்வூதியப் பிடித்தம் செய்த மாநிலங்கள் கூட  - தேர்தல் பரப்புரையில் சொன்னது போல் - GPF அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் NPS இல் செலுத்திய பணத்தை (PFRDA வில்) - திருப்பித் தர மத்திய அரசிடம் முறையிட்டுள்ளார்கள். மத்திய அரசு ஓய்வூதிய நிதியை - GPF ஆக மாற்றித் தர மறுக்கிறது. 

மத்தியில் அந்தந்த மாநில அரசுகளுக்கு - சாதகமான அரசு -  அடுத்து - மத்தியில் அமையும் போது - GPF அரசாணை முழுமையாய் சாத்தியப்படும். 

சமீபத்திய கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் CPS ஐ மாற்றி -  GPF அறிவிப்போம் என காங்கிரஸ் அறிவித்தபடி - வெற்றி பெற்ற பின்பு - சட்டமன்ற முதல் கூட்டத் தொடரிலேயே - GPF சட்ட வரைவு & அரசாணை - அமலாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை - 2003 -2023 வரை - 20 ஆண்டுகள் - தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செலுத்திய   CPS நிதி அனைத்தும் -  தமிழக அரசே தனது தனிப்பட்ட கணக்கில் முதலீடு செய்து நிர்வகிக்கிறது. மத்திய NPS - PFRDA வில் - நமது தமிழக அரசு ஊரியர்களது - CPS சந்தா தொகையை செலுத்தி - தமிழக அரசு இதுவரை இணையவே இல்லை. அதனால் Jharkhand, Chattisgarh, Punjab, Himachal, Rajasthan  போல் -  CPS ஐ GPF ஆக மத்திய அரசிடம் தமிழக அரசு 1% கூட போராட வேண்டியதில்லை.  காலச் சூழலால் கலைஞர், ஜெ வால் - தவறவிடப்பட்ட -  GPF ஐ அறிவித்து - தற்போதைய அரசு - அரசியலில் நிரந்தரமான நல்ல பெயரை - அரசியல் களத்தில் ஈட்ட - நல்ல சந்தர்ப்பம் இருந்தாலும் - 20 ஆண்டுகாலம் -  இலவு காத்த கிளிகளை -  தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களை இனியும் - GPF தருவோம் என நம்பி காலம் கடத்துவது வெறுப்பின் உச்சம்.

17 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை MP தேர்தலில் வெல்ல - பாட்னாவில் ஒற்றுமையாக கூடினார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ( Himachal , Karnataka ) - GPF அமல் செய்வோம் என்ற பெரிய வாக்குறுதியே - காங்கிரஸ் மீண்டும் 2 மாநிலத்திலும் ஆட்சி அமைக்க - 90% காரணம் என கள நிலவரம் சொல்கிறது.

போகும் போக்கை பார்த்தால் - பாஜகவை பெருவாரியாக MP தேர்தலில் வெல்ல - காங்கிரஸ் கட்சியின் - வரும் MP தேர்தலில் - தேசிய அளவிலான முதன்மை வாக்குறுதியே - NPS / CPS ஒழித்து - GPF ஆக மாற்றுவதாக - பாராளுமன்றத்தில் சட்டமியற்றுவோம் என சொல்ல நிறைய வாய்ப்பு உள்ளது. 

ஆதலால் -  மத்திய அரசு எதிர்வரும் தேர்தலுக்கு பின் செய்யுமோ அல்லது பெரும்பான்மை பெற்றுவிட்டால் இழுத்தடிக்குமோ (BJP / காங்கிரஸ் எதுவாக இருப்பினும்) - ஆளும் தமிழக அரசை - CPS ஒழித்து - GPF அமல் செய்ய நிர்பந்திக்கவே நமது குரல்கள் - அமைதி வழியில் - CL போராட்டமாக ஒன்றிணைய வேண்டும்...  CPS/NPS ஐ ஆதரித்து - ஆளும் திமுக + அதிமுக அரசுகள் & மத்திய பாஜக + காங்கிரஸ் அரசுகள் மக்களவை மாநிலங்களவையில் வாக்களித்து சட்டமாக்கினாலும் - அரசியல் நிர்பந்தம்  + பணியாளர்களது  எழுச்சியால் + போட்டி அரசியலால் - அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய + ஆட்சியை கைப்பற்ற - GPF என்ற மாபெரும் கோரிக்கை -  அனைத்து மாநிலத்திலும் - தேசம் முழுவதும் பெரிய கோரிக்கையாக உருவெடுத்து - GPF நிறைவேற்றும் கட்சிக்கு - வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற சூழல் - அரசியல் களத்தில் கனிந்துள்ளது. ஆதலால் - ஜனநாயக முறைப்படி - அமைதி வழியில் - அழுத்தமாய் - நமது GPF கோரிக்கை  - அனைத்து வேறுபாடு கடந்து போராட்டக் களத்தில் இணைய இது மிக நல்ல தருணம். 

எந்த அரசும் எந்த இயக்கமும் நமக்கு எதிரியில்லை. நமது 20 ஆண்டுகால நிறைவேறாத வாழ்வாதார பாதிப்புக்காக - களமிறங்கி போராடுகிறோம். நமது GPF கோரிக்கையை நிறைவேற்றும் கட்சி/ஆட்சி - வரலாற்றில் மிக நல்ல பெயரை பெற்று - நமது பணியாளர்களிடையே ஈட்டி - ஏகோபித்த வரவேற்பை அரசியல் களத்தில் பெறும் என்பதில் ஐயமில்லை... 

மே 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு/பின்பு செய்யலாம் என்று கூட தமிழக அரசு - நமது GPF ஐ தள்ளிப் போடலாம். காலம் தாழ்த்தாமல் - 20 ஆண்டுகளுக்கு பிறகாவது - மீண்டும்  பழைய ஓய்வூதியம் கிடைக்கப் பெறுவது - சங்கங்கள் கடந்து - CPS ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் - சங்கம் பாராமல் - இயக்கம் பாராமல் - நாம் ஒன்றுபட்டு போராட இணைந்து - நமது தமிழக அரசுக்கு தரும் அமைதி வழி எதிர்ப்பில் தான் உள்ளது... இது அரசை வலுவாக எதிர்க்கும் போராட்டமன்று. நமது  நீண்டகால வாழ்வாதார ஓய்வூதிய உரிமையை பாதிப்பை -  ஒருமித்த குரலில் உணர்த்தி - ஒற்றை ஓய்வூதிய கோரிக்கையை விரைந்து வெல்லவே...  போராட்ட எண்ணிக்கையே - நமக்கு வெற்றியைத் தேடித் தரும்... 

CPS க்கு மாற்றாக

GPF தருக என்ற 

ஒற்றை கோரிக்கை மட்டுமே... 



GPF ல் உள்ளவர்களுக்கு 

50%, 40%, 30%, 20% என  பென்ஷன்தொகை - ஊதியம் போல் மாதாமாதம் - பணிக்காலம் முடிந்து - உயிர்வாழும் வரை & தன்னைச் சார்ந்துள்ள துணை வாழும் வரை...

CPS உள்ளவர்களுக்கு - சொற்பத் தொகை மட்டுமே settlement. 

நாம் பணிக்காலம் முழுவதும் செலுத்திய CPS தொகை 50% +10% வட்டியாக தரப்படும். மீதி 40% பங்குச்சந்தையில் முதலீடு. அங்கு நம் பணம் வளரும் / காணாமலும் போகும். வாழ்வு முழுவதும் நமது பணித்தொகுதிக்காக உழைத்த நமக்கு -  பணிக்காலம் முடிந்த அடுத்த மாதம் முதல் அரசின் 1% ஊதியம் கூட இல்லை. (ஆனால் அடுத்த தேர்தலில் வெல்லும் புதிய சட்டமன்ற உறுப்பினருக்கு கூட - GPF உண்டு. 20-30 ஆண்டுகாலம் பணியாற்றிய அரசு ஊழியன்/ ஆசிரியனுக்கு இல்லை) 

CPS ஆல் கடந்த 20 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்ட 

அனைத்து ஆசிரியர்கள் 

(PG+ BT + SGT) & 

அரசு ஊழியர்கள் - பெரும்பான்மையாக சங்கம் கடந்து 

நாளை (27.06.2023) ஒரு நாள் 

'அடையாள CL விடுப்பு' எடுத்து  

களம் காண்க... வெற்றி உறுதியாக சில மாதங்களில் அரசாணையாக... 

The important thing in a game is not Winning by taking part... 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.