பிளஸ் 2 துணைத் தேர்வு - தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14-ல் அனுமதி சீட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

பிளஸ் 2 துணைத் தேர்வு - தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14-ல் அனுமதி சீட்டு

தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணைத் தேர்வு, ஜூன், ஜுலை மாதங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) வரும் 14-ம் தேதி பிற்பகல் முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில் ஹால் டிக்கெட் என்ற வாசகத்தை கிளிக் செய்து, தங்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத்தேர்வுக்கான காலஅட்டவணையை தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+2 துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு - Hall Admit Card for +2 Supplementary Examination - Directorate of Government Examinations Important Notice

+2 துணைத் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை 14.06.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2023 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையகளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுகல் தொடர்பான

செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் "HALL TICKET" என்ற வாசகத்தினை (Click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 + HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அஞமதிக்கப்படமாட்டார்கள். ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.