நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 18, 2023

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலர் ஆஜராக உத்தரவு!



நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மாஜி அதிகாரி ஆஜராக உத்தரவு Ex-officer ordered to appear in contempt of court case

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலர் பிரதீப் யாதவ், டி.ஆர்.பி., முன்னாள் தலைவர் லதா ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் அருகே அருதன்குடி தாரணி தாக்கல் செய்த மனு: பட்டதாரி உதவி ஆசிரியர் பணி நியமன தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 மே 9 ல் வெளியிட்டது.

2017 ஜூலை 2ல் தேர்வு நடந்தது. சில கேள்விகள் தவறாக இருந்தன.

இதற்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி சிலர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.

தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நியமனத்திற்கு தகுதியானவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், சிலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

எனக்கு கருணை மதிப்பெண் வழங்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த பிரதீப் யாதவ், டி.ஆர்.பி., தலைவராக இருந்த லதா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தாரணி குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிரதீப் யாதவ், லதா ஆகியோர் ஆஜராக 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.