அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை, மாதிரிப் பள்ளிகளில் சேர்த்தல் - மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை, மாதிரிப் பள்ளிகளில் சேர்த்தல் - மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்

Admission of Class 11 students in Government Schools to Model Schools – Procedures of Member Secretary of Model Schools - அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை, மாதிரிப் பள்ளிகளில் சேர்த்தல் - மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்!!

பார்வை 1-யின்படி "அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக, சிறப்பு திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்" என அறிவிக்கப்பட்டு அதனை செயல்படுத்தும் விதமாக அரியலூர், கடலூர், தருமபுரி, íள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உண்டு, உறைவிட வசதியுடன் கூடிய 10 மாதிரிப் பள்ளிகள் 2021-2022-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

2. பார்வை 2-யின்படி 2022 - 2023 -ஆம் கல்வியாண்டில் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்துார், திருவள்ளுர், வேலுார், நாகப்பட்டினம், இராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 15 மாவட்டங்களில் 17 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

3. பார்வை 3-யின் படி 2023-24-ஆம் கல்வியாண்டில் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய 13 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

3. இணைப்பில் கண்டுள்ள மாணவர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 11-ஆம் வகுப்பில் உயிரியியல் மற்றும் கணினிப் பிரிவில் மாதிரிப் பள்ளியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாதிரிப் பள்ளியில் 21.06.2023-க்குள் சேர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.