CM Stalin on NEXT: தேசிய மருத்துவ தகுதித் தேர்வைக் கைவிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

CM Stalin on NEXT: தேசிய மருத்துவ தகுதித் தேர்வைக் கைவிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

CM Stalin on NEXT: தேசிய மருத்துவ தகுதித் தேர்வைக் கைவிடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் - CM Stalin on NEXT: Drop National Medical Eligibility Test: CM Stalin's letter to PM

நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவத்‌ தகுதித்‌ தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும்‌ என்று வலியுறுத்தி, இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌கடிதம்‌ எழுதியுள்ளார்.

June 13, 2023 by மாய நிலா நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவத்‌ தகுதித்‌ தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும்‌ என்று வலியுறுத்தி, இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌கடிதம்‌ எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும்‌, முதுகலை மாணவர்‌ சேர்க்கைக்கான நுழைவுத்‌ தேர்வாகவும்‌ மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித்‌ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌, இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு இன்று (13-6-2023) கடிதம்‌ எழுதியுள்ளார்‌. மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌, நீட்‌ தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில்‌, நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும்‌ சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும்‌, மாநில அரசின்கீழ்‌ இயங்கும்‌ மருத்துவக்‌ கல்வி நிறுவனங்களுக்கும்‌ பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்‌ என்பதால்‌, இந்தத் தேர்வு முறையினைக்‌ கைவிட வேண்டுமென்றும்‌, தற்போதுள்ள முறையே தொடர வேண்டும்‌ என்றும்‌ முதலமைச்சர்‌ தனது கடிதத்தில்‌ வலியுறுத்தியுள்ளார்‌.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.