கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ₹12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்குதல் - அரசாணை (நிலை) எண்.98 நாள்: 26.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 28, 2023

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ₹12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்குதல் - அரசாணை (நிலை) எண்.98 நாள்: 26.06.2023

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ₹12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு - Provision of ₹12,000/- per annum for a maximum of 3 years as welfare allowance to the workers suffering from serious illnesses and unable to work under the Construction Workers Welfare Board - Ordinance (Status) No.98 Dated: 26.06.2023

அறிவிப்புகள் 2023-2024 - தொழிலாளர் நலன் - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள நல வாரியம் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12,000/- வீதம் அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(ஐ2)த் துறை

அரசாணை (நிலை) எண்.98

நாள்: 26.06.2023

சோபகிருது வருடம், ஆனி-11 திருவள்ளுவர் ஆண்டு-2054 படிக்கப்பட்டது:

முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் எண்.W4/9422/2023, நாள் 05.04.2023 மற்றும் 19.05.2023. ஆணை:

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்: -

"தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை. டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா (Moderate and Severe Persistant). சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும்.

இதற்கென ஆண்டுக்கு 60 இலட்சம் ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 1.80 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். இத்திட்டத்தினால் சுமார் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்." 2.மேற்கூறிய அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகை வழங்கும் நலத்திட்டத்தை கீழ்காணும் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளின்படி அறிமுகப்படுத்தி, அதற்கான உத்தேச செலவினத் தொகை e.1,80,00,000/-600601 தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ள உரிய ஆணைகள் வழங்குமாறு முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அ) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பதிவு அட்டையினை இணைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களிடம் (ச.பா.தி) இது தொடர்பாக விண்ணப்பிக்கப்படல் வேண்டும்.

ஆ) பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மேற்படி தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சிவில் சர்ஜன் தாத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடமிருந்து மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இ) தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை (அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்) மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஈ) மேலும், தீவிர நோய் பாதிப்பு குணமடையாமல் நீடிக்கும் நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டிற்கு சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து வேண்டும். அளிக்க

உ) ஆண்டொன்றுக்கு ரூ.12,000/- வழங்கும் இந்நலத்திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

ஊ) தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகையானது மாதம் ஓன்றுக்கு ரூ.1,000/- வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக RECS மூலம் வழங்கப்படும். 3. முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் கருத்துருவினை ஏற்று, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா (Moderate and Severe Persistant), சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12,000/- வீதம் அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு வழங்குவதற்கான திட்டத்தை மேலே தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளின்படி அறிமுகப்படுத்தி, அதற்கான உத்தேச செலவினத் தொகை ரூ.1,80,00,000/-னை (ரூபாய் ஒரு கோடியே எண்பது லட்சம் மட்டும்) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.

4. இவ்வாணை நிதித் (L.W&S.D/Edu-II) துறையின் அ.சா.கு.எண்.22095/2023, நாள் 07.06.2023-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.