பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 12, 2023

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!



Director of State Planning to conduct special training course for supplementary examination for students who did not pass / did not appear in the general examination!! - பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி. 2022-23 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை பதிவு செய்த அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள் குறித்து திட்டமிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும் துணைத் தேர்வு எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு கீழ்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

1. தங்கள் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பொதுத் தேர்விற்கு பதிவு செய்தவர்களில் வருகை புரியாதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

2. இம்மாணவர்களை கண்டறிந்து இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி துணைத்தேர்வினை தன்னம்பிக்கையுடன் சந்திக்க தக்க ஆலோசனைகளை வழங்கி ஊக்கமூட்டி பள்ளிக்கு அழைத்து வரவும் துணைத்தேர்விற்கு உரிய காலகெடுவிற்குள் விண்ணப்பிக்கவும் (12ஆம் வகுப்பிற்கு 11.05.2023 முதல் 17.05.2023 வரை) சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள். வட்டார வளமைய ஆசிரியர் - பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் உதவியோடு மேற்கொள்ள வேண்டும். மேலும். இம்மாணவர்களின் பெற்றோர்களுக்கும் துணைத்தேர்வுக்கான விழிப்புணர்வையும் தக்க ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

3. 12ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வு 19.06.2023 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகளுக்கான சிறப்பு: பயிற்சி வகுப்புகளை திட்டமிட்டு உரிய கால அட்டவணை தயாரித்து சிறப்புடன் செயல்படுத்த வேண்டும்.

4. துணைத்தேர்வு குறித்த மாணவர்களின் பெற்றோர்களின் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 14417 இலவச உதவி மைய எண் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

5. துணைத்தேர்வு எழுதுவதற்கு பாட ஆசிரியர்கள் மூலமாகப் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மாணவர்களைத் துணைத்தேர்விற்குத் தயார் செய்வதைப் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்களை உள்ளடக்கிய உயர்கல்வி வழிகாட்டல் குழு பள்ளியுடன் இணைந்து அதனைச் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் வருகை புரியாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும் துணைத்தேர்விற்கு பதிவு செய்வதற்கும். துணைத்தேர்வு எழுதுவதை உறுதி செய்வதற்கும் மற்றும் உயர்கல்வியை தொடரவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் அனைத்து செயல்பாடுகளை கண்காணிக்கவும் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்யவும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். -


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.