தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் - நாள். 10.05.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 12, 2023

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள் - நாள். 10.05.2023



Proceedings of Tamil Nadu Director of Private Schools and State Principal Liaison Officer on Right to Free and Compulsory Education Act for Children – Date. 10.05.2023 - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை- 6 ந.க.எண்.3605/ இ1 / 2023 நாள். 10.05.2023

பொருள் :

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 1 2023-24ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / | Std) குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - பள்ளியில் மாணாக்கர்களை சேர்க்கை செய்வது - அறிவுரை வழங்குதல் - சார்பாக.

பார்வை : இவ்வியக்கக செயல்முறைகள் 3605/ இ1 / 2023,

நாள்.17.04.2023 மற்றும் 26.04.2023

பார்வையில் கண்ட இவ்வியக்கக செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 2023-24ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, பிரிவு 12(1)(C) இன்கீழ் 20.04.2023 முதல் சேர்க்கைக்கு இணையதள வழியாக விண்ணப்பம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இணையதள வழியாக பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்து சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 1. மேற்படி இணையதள வழியாக விண்ணப்பிக்கப்படும் மாணவர்களின் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து பார்வையில் கண்ட செயல்முறைகளில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி சேர்க்கைக்கு தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் மாணாக்கர்களின் விவரத்தை தகவல் பலகையில் 21.05.2023ல் வெளியிடப்பட வேண்டும்.

2. EMIS-ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கையின்படி (Intake. Capacity) மட்டுமே சேர்க்கை செய்யப்பட வேண்டும். மேற்கண்ட முறையில் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் DC Login-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

3. மேற்படி தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களின் பெற்றோர்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்/காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என 24.05.2023 அன்று தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

4. தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்களின் பெற்றோர்களை அழைத்து சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும். சேர்க்கை உறுதி செய்யப்பட்டதற்கு மாணாக்கர் பெற்றோரின் கைப்பேசிக்கு OTP (One Time Password) அனுப்பப்படும். அந்த OTP எண்ணை EMIS இணையதளத்தில் பள்ளி முதல்வரால் பதிவு செய்தவுடன் அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுவிடும். 5. ஒரு மாணவனுக்கு ஒரு பள்ளியில் மட்டுமே சேர்க்கை உறுதி செய்ய OTP எண் அனுப்பப்படும். இதே மாணவர் வேறு பள்ளியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அப்பள்ளியில் எந்த காரணத்தைக் கொண்டும் சேர்க்கை செய்ய இயலாது. OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யும் முன் இத்தகவலினை தேர்வு செய்யப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் விளக்கமாக எடுத்துரைத்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பள்ளி முதல்வர்கள் சேர்க்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

6. சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பின்னர் EMIS இணையதளத்தில் அம்மாணவர்களை RTE மாணவர்களாக குறிப்பிட்டு (RTE Tagging) விவரம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். RTE 25% இட ஒதுக்கீட்டு திட்டத்தின் கீழ் அல்லாது சேர்க்கை செய்யப்படும் மாணாக்கர்கள் (Normal Student) தவறுதலாக Tagging செய்யப்பட்டால் எக்காரணத்தை கொண்டும் மாற்றம் செய்ய இயலாது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே புதிதாக சேர்க்கை செய்யப்படும் மாணாக்கர்களை மிக கவனமுடன் EMIS-ல் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அறிவுரைகளை பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்து அதனை பின்பற்றி செயல்படுமாறும் தங்களது மாவட்டம் சார்பாக எவ்விதப் புகாருக்கும் இடமளிக்கா வண்ணம், தேவையான அலுவலர்களை நியமித்து இப்பணியினைச் செவ்வனே மேற்கொள்ளுமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் / மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தனியார் பள்ளி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.