மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 12, 2023

மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

2022-23 General Transfer Consultation of Teachers - Conducted through EMIS Online - Pro-Procedures of Commissioner of School Education and Director of Elementary Education Date: 11.05.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாள்.11.05.2023

பள்ளிக் கல்வி -2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - சார்பு. பார்வை:

1) சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள்.26.4.2023,02.05.2023 06.05.2023

பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2022-23 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

மேற்காண் காலஅட்டவணைப்படி நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் வருவாய் மாவட்டத்திற்குள் (Within District) விண்ணப்பித்துள்ள அனைத்துவகை ஆசிரியர்களுக்கு அவரவர்கள் முன்னுரிமைப்படி (Seniority wise) அம்மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினை விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து மாறுதல் ஆணை பெற்றுக்கொளள்லாம்.

மேலும் அடுத்ததாக தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கென விருப்பம் இல்லாத காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy)காலிப்பணியிடத்திற்கான மாறுதல் ஆணை பெறாமல் உள்ள Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் (One Cycle) இந்த Resultant Vacancy பணியிடத்திற்கு கலந்தாய்வு அவரவர்களின் முன்னுரிமைப்படி நடைபெறும்.

இதற்கு அடுத்தப்படியாக மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது பிறமாவட்ட காலிப்பணியிடத்துடன் தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள ஏற்படும் காலிப்பணியிடத்தினையும் அவரவர்களுடைய இனச்சுழற்சி வரும்போது (Seniority wise) தெரிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குஅறிவுறுத்தப்படுகிறது இத்தகவலை தங்கள் மாவட்டத்தில் பொதுமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு இதனை பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.