Directed by the Director of Government Examinations to download and issue the +2 Marks Certificate to the students from 12.05.2023 - +2 மதிப்பெண் சான்றிதழை 12.05.2023 முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
கூடுதல் அறிவுரைகள்:-
1 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் பட்டியல்களை (Statement of Marks) சரிபார்த்து, அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை சான்றொப்பமிட்டு உரிய நாளில் மாணவர்களுக்கும் அளித்திட வேண்டும். 2. மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக, அத்திருத்தங்களை பின்னர் இவ்வியக்கத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் "Refer Original Certificate" என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
4. அசல்மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பெறப்பட்டப் பின்னர், சம்பந்தப்பட்ட தேர்வருக்கான பள்ளியின் வசமுள்ள மாற்றுச் சான்றிதழ் பதிவேட்டின் Counter Foil-ல் சம்பந்தப்பட்ட தேர்வரது பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் வரிசை எண்ணை, பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்படி Counter Foil-ல் மேற்கொள்ளப்படும் பதிவுகள் நிரந்தரமாக பின்வரும் காலத்தில் சரிபார்த்தலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
மேற்காண் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.