பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தல் எப்போது? - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 31, 2023

பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தல் எப்போது? - CEO Proceedings

பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தல் எப்போது? - CEO Proceedings - When to dismiss teachers transferred in public transfer consultation? - CEO Proceedings

கோயம்புத்தூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பிறப்பிப்பவர் : – திருமதி.லெ.சுமதி,எம்.எஸ்.சி.,எம்.எட்.,எம்.பில்., ந.க.எண்: 4586/அ3/2023, நாள் 30.05.2023

வைகாசி திருவள்ளுவராண்டு 2054

பொருள் : பள்ளிக் கல்வி -கோயம்புத்தூர் மாவட்டம்- 2022-2023

ஆம் ஆண்டு அரசு/நகராட்சி அனைத்துவகை ஆசிரியர்கள்- உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது- மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.05.2023 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தல்- - சார்பாக.

பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.21243/சி3/இ1/2023 நாள்.26.04.2023 மற்றும் இதர தேதிகள்.

பார்வையில் காண் செயல்முறைகளின்படி கோவை வருவாய் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் 2022-2023 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு 15.05.2023 முதல் EMIS இணையதளம் மூலம் நடைபெற்று முடிந்தது.

மேற்காண் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணைபெற்ற ஆசிரியர்கள் சார்பாக பின்வரும் தெளிவுரை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

1) மேல்நிலை/ உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களைப் பொறுத்தவரை அன்னார்கள் தங்கள் பள்ளிகளில் மூத்த முதுகலை/பட்டதாரி ஆசிரியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர் 31.05.2023 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

2) இதர ஆசிரியர்களை பொறுத்தவரை, மாறுதல் பெற்ற ஆசிரியரிடம் பள்ளித் தலைமையாசிரியரால் அளிக்கப்ட்டுள்ள பொறுப்புகளை முழுமையாக முடித்து ஒப்படைத்த பின்னர் 31.05.2023 பிற்பகல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

மேலும் மாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 01.06.2023 முற்பகல் அன்று மாறுதல் பெற்ற பின்னர் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 3) மாறுதல் ஆணையினை 31.05.2023 தெரிவிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு மேல் இவ்வலுவலகத்தில் பெற்றுச் செல்ல பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆசிரியர் பணி அறப்பணி என்பதால் அனைத்து ஆசிரியர்களும் இதுநாள் வரை மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள், பள்ளிகள், மாணவர்களின் நலன் கருதி மேலும் ஊக்கத்துடன் பணியாற்றி நமது கல்வித்துறைக்கு நற்பெயரினை பெற்றுத்தர பாடுபடவேண்டும் என உளமாற வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.