Press Release No : 1024 From the International Institute of Tamil Studies - Admission Notification for M.A Tamil - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 27, 2023

Press Release No : 1024 From the International Institute of Tamil Studies - Admission Notification for M.A Tamil

International Institute of Tamil Research Tamil Post Graduate Admission with Scholarship for Academic Year 2023-24 - Press Release

செய்தி வெளியீடு எண்: 1024

நாள்: 26.05.2023

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ் முதுகலை பட்டப்படிப்பு 2023-24ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை (M.A. Tamil), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன.

2023-24ஆம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. விண்ணப்பங்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப்படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வகுப்பில் சேர்க்கைப் பெறும் மாணவர்களுள் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாகத் திங்கள் தோறும் ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.

இருபாலருக்கெனத் தனித் தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு அனுப்பப்பெறுதல் வேண்டும். விண்ணப்பம் (கட்செவி (whatsapp) எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் 20.06.2023 ஆகும். மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை. மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி. சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.