தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023-2024 ஆம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கான இரண்டாம் கட்ட மாணவ/மாணவியர்கள் சேர்க்கை - செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 15, 2023

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023-2024 ஆம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கான இரண்டாம் கட்ட மாணவ/மாணவியர்கள் சேர்க்கை - செய்தி வெளியீடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023-2024 ஆம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கான இரண்டாம் கட்ட மாணவ/மாணவியர்கள் சேர்க்கை - செய்தி வெளியீடு - Tamil Nadu Sports Development Authority 2023-2024 Second Phase Admission for Special Level Sports Hostel - Press Release

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் மாணவியர்களுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் கூடைப்பந்து மற்றும் ஜுடோ விளையாட்டுகளிலும், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் ஜுடோ விளையாட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு மாவண/மாணவியர் சேர்க்கை நடைபெறும். மேலும், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16.05.2023.முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள்: 19.05.2023 அன்று மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு நிலை நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 20.05.2023 அன்று காலை 7.00 மணியளவில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளையாட்டுத் தகுதிகள்:-

(01.01.2023 அன்று) 17 வயது நிரம்பிய 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற /கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவ / மாணவியர் தகுதியுடையவர் ஆவர். தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.