நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 16, 2023

நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாணவர்களின் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

34 மாணவர்களின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீலகிரியைச் சேர்ந்த 34 மணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதப் பாடத் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவியதாக எழுந்த புகாரில் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களின் 32 பேரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், 31 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவியதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் சமர்ப்பித்த நிலையில், இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக, உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத ஆசிரியா்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து 34 மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்திருந்தார்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே சாம்ராஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாா்ச் 27ஆம் தேதி நடைபெற்ற கணித தோ்வின்போது, பணியில் இருந்த ஆசிரியா்கள் தோ்வு எழுதிய 34 மாணவா்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உதவியது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4இல் கணித தோ்வு எழுதிய 34 மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பப்பட்டதால் தோ்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய முதன்மைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், துறை அலுவலா் செந்தில், அலுவலா் சீனிவாசன், அறை கண்காணிப்பாளா்கள் ராம்கி, மூா்த்தி ஆகிய 5 ஆசிரியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், 34 மாணவா்களின் விடைத்தாள்கள் சென்னை தோ்வுத் துறைக்கு அனுப்பி, அங்கு அதிகாரிகள் பார்வையிட்டு, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவினர் தாக்கல் செய்திருப்பதால், இன்று 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.