2023-2024ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 13, 2023

2023-2024ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் - தொடர்பாக



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவது சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல் - தொடர்பாக - 2023-2024 Provision of Guidelines for Identification of School Cell Children and differently abled children aged 6 to 18 years - Regarding

பார்வை 3-இல் காணும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலின்படி, 3 அடுக்கு குழுவில் முதல் அடுக்கு குழு பள்ளி அளவில் சிறப்பாக செயல்படுவதை அனைத்து தலைமையாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாவது அடுக்கு குழு ஒருங்கிணைப்பாளரான வட்டார கல்வி அலுவலர் பள்ளி அளவிலான குழுசெயல்பாடுகளை கண்காணிப்பதோடு பள்ளி அளவிலான குழுவிற்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். (செயல்முறைகள் தனியே வழங்கப்படும்)

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்களிடம் பயிலும் அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணை பெற்று வைத்திருத்தல் வேண்டும். மேலும் தங்கள் பள்ளிகளில் பயின்ற பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை பள்ளி ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்கும் பொழுது சமர்ப்பித்தல் வேண்டும். அனைத்து வட்டார வளமையப் பணியாளர்கள் மேற்கண்ட பணிகளில் பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், ஆசிரியர் பயிற்றுநர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளின் குடியிருப்பு பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகள் சார்ந்த விவரங்களைச் சரியாகப் பெற்று வைக்கவும் (உயர் அலுவலர்களின் மீளாய்வின் போது சமர்பிக்கும் பொருட்டு) மற்றும் மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து பள்ளிச் செல்லா குழந்தைகள் சார்ந்து கேட்கப்படும் புள்ளி விவரங்களை பள்ளி அளவில் தவறு இல்லாமல் பெற்று உரிய காலத்திற்குள் அனுப்ப வேண்டும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 2022-2023 கல்வியாண்டில் குடியிருப்புகளில் கணக்கெடுப்பு மேற்கொண்ட போது ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லாத காரணத்திற்காக குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது தெரியவருகிறது. மேற்படி ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் தலைமையாசிரியர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விட்டு பின்பு ஆவணங்களை பெற பெற்றோருக்கு வழி காட்ட வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் (கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி) சேர்க்கை மறுக்கக் கூடாது எனவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரைகள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பார்வை 1-இல் காணும் கடிதத்தின்படி 2023-24ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி செல்லா / மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரத்திலும், மே இறுதி வாரத்திலும் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட Never Enrolled Survey-இல் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஒன்றியத்தில் 1 குழந்தை, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 4 குழந்தைகளும் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 1 குழந்தையும் என மொத்தம் 6 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே பார்வை 4-இல் கண்டுள்ள கூடுதல் மாநில திட்ட இயக்குநரின் மீளாய்வு கூட்டத்தில் கணக்கெடுப்பு சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

1. மாவட்ட தெடக்க் கல்வி அலுவலர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக மே இறுதி வாரத்தில் நடைபெறும் கணக்கெடுப்பில், அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.

2. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் 2022- 23-இல் தொடர் வருகை புரியாத மாணவர்கள் / இடைநின்ற மாணவர்கள் மற்றும் Need to Admit ல் உள்ள மாணவர்களையும் மீள பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. மே இறுதி வாரம் நடைபெறும் கணக்கெடுப்பில் பங்கேற்ற கணக்கெடுப்பாளா விவரம் பங்கேற்பாளர்கள் TN Administrator App -இன் மூலமாக கண்காணிக்கப்படும்

4. கணக்கெடுப்பு பணி என்பது ஒரு தொடர் பணியாகும். தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிக்கு வாராத மாணவர்கள் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கி பள்ளிக்கு வருகை புரிவது பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இதில் தலையீட்டு உதவி ஏதேனும் தேவைப்படின் உரிய அலுவலகம் மூலம் பெற்றுத் தர வேண்டும். (வட்டார வளமையம், DCPO, DPO, Child help line, etc.,)


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.