ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 15, 2023

ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்



ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Integrated Law Courses: Application Registration Begins

சென்னை, மே 15: ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேரு வதற்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யுடன் இணைந்த சீர்மிகு சட்டப் பள்ளியிலும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு வழங் கப்படுகிறது. இதில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப் பப் பதிவு சட்டப்பல்கலைக் க ழகத்தின் இணையப் பக்கத்தில் (www.tndalu.ac.in) திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. வரும் மே 31-ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவடையவுள்ளது.

சட்டப் படிப்பு, 5 ஆண்டு, மூன்று ஆண்டு என இரு நிலைகளில் தமி ழகத்தில் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்ப டிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப் பும் படிக்க இயலும்.

மூன்றாண்டு படிப்புக்கு எல்எல்பி, எல்எல்பி ஹானர்ஸ் என்னும் பெய ரிலும், ஐந்தாண்டு படிப்புக்கு பி.ஏ, எல்எல்பி மற்றும், பி.ஏ, எல்எல்பி ஹானர்ஸ் என்னும் இருநிலைகளிலும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.