அரசு ஊழியர்கள் துறைத் தேர்வு எழுத விலக்கு பெறும் வயது 55- ஆக உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 15, 2023

அரசு ஊழியர்கள் துறைத் தேர்வு எழுத விலக்கு பெறும் வயது 55- ஆக உயர்வு



அரசு ஊழியர்கள் துறைத் தேர்வு எழுத விலக்கு பெறும் வயது 55- ஆக உயர்வு

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் (TN Govt Employees) சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளை உரிய காலத்தில் எழுதி வருகின்றனர். இவர்களுக்கு குறிப்பிட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை தொடர்ச்சியாக முயற்சித்தும் தேர்ச்சி பெறவில்லை எனில், அவர்களுக்கு விலக்கு அளித்து உரிய சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு அரசு ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்திருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு (TN Govt Employees) பதவி உயர்வு, கூடுதல் பணிக் கொடை உள்ளிட்டவற்றை பெறுவதற்காக சிறப்பு துறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வயது வரம்பு என்பது 53ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை தொடர்ந்து தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறவில்லை எனில், அவர்களுக்கு தேர்ச்சி பெறுவதில் இருந்து நிபந்தனைகளுடன் கூடிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரசு அலுவலர் தேர்வுகள்

அதாவது, 53 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். அரசு அலுவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது 5 தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு சான்றாக தொடர்புடைய துறை அல்லது சிறப்பு தேர்வை 5 தடவைகள் தேர்வு மையத்திற்கு சென்று எழுதிய விண்ணப்பதராரரின் ஹால் டிக்கெட் (Hall Ticket) அனுப்பி வைக்க வேண்டும். இதனுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட துறை அல்லது சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் ஆகிய விவரப் பட்டியலும் வேண்டும்.

வயது வரம்பு உயர்வு

தற்போது ஓய்வு பெறும் வயது 60ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப சிறப்பு துணை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான வயது வரம்பும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வயது வரம்பை தளர்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால், அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஓய்வு பெறும் வயது

இதற்கான காரணம் குறித்தும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த போது தான், சிறப்பு மற்றும் துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து சலுகை பெற 53 வயது என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது

தமிழக அரசு புதிய உத்தரவு

இதுதொடர்பாக தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சிறப்பு மற்றும் துணைத் தேர்வுகளில் ஒரு அரசு அலுவலர் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்களிப்பதற்கான வயது வரம்பு 53ல் இருந்து 55ஆக உயர்த்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு அனைத்து தலைமை செயலகத் துறைகள், துறை தலைமைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.