பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் (Electronic Braille Reader) பெற விண்ணப்பிக்கலாம் - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செய்தி வெளியீடு நாள்: 04.05.2023 - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 4, 2023

பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் (Electronic Braille Reader) பெற விண்ணப்பிக்கலாம் - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செய்தி வெளியீடு நாள்: 04.05.2023 -

செய்தி வெளியீடு எண்: 830

நாள்: 04.05.2023

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை

செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் (Electronic Braille Reader) 2023-2024-ஆம் நிதியாண்டில் பெறத் தேவையான விண்ணப்பங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி (Electronic Bralle: Reader) பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:-

1. பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய அடையாள பெற்றிருக்க வேண்டும். அட்டை

2. இளநிலை கல்வி படிப்பவராகவோ அல்லது முதுநிலைக்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.

3. பட்டப்படிப்பு முடித்தோர் TET, TNPSC போன்ற போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருக்கவேண்டும். 4. பிரெய்லி எழுத்துகளை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி பெற விரும்பும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், பிரெய்லி முறையில் கல்வி பயின்றதற்கான சான்று. இளங்கலை கல்வி பயில்வதற்கான அல்லது முதுநிலைக் கல்வி பயில்வதற்கான சான்று அல்லது பட்டபடிப்பு முடித்து TET, TNPSC போன்ற போட்டி தேர்வுக்கு செல்வதற்கான சான்று. ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் தகுதியுள்ள பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்பி பயன்பெறுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.