680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 18, 2023

680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை

680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை

தமிழகத்தில் 680 அரசு மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. பள்ளிக் கல்வி துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டும் 6000 உள்ளன.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் இடமாறுதல் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி இரண்டு தினங்களுக்கு முன் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது.

இடமாறுதலின்போது பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பில் இருந்தவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டனர். அதையடுத்து 680 மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் அப்பள்ளிகள் எப்படி செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாக பிரச்னை ஏற்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதற்குள் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.