துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 12, 2023

துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியீடு

துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து ஆணை

அரசு ஊழியர் 55 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும், 5 முறை துறைத் தேர்வு எழுதி இருக்க வேண்டும் . துறைத் தேர்வு தலைமை ஆசிரியர் தேர்ச்சி பெறுதல் சார்ந்து அரசாணை வெளியிட்ட போது , தவிர்ப்பு கோரிய தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு அனுமதிக்கவில்லை .அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது



சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - அரசாணை வெளியீடு

Exemption from Passing Special Examinations / Departmental Examinations - Issue of Ordinance - Ordinance (Status) No.41 Dated : 09.05.2023

அரசாணை (நிலை) எண்.41 நாள் : 09.05.2023

ஆணை;

மேலே ஒன்று மற்றும் இரண்டில் படிக்கப்பட்ட அரசாணை மற்றும் அரசுக் கடிதத்தில், சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து ஒரு அரசு அலுவலருக்கு விலக்களிக்க அவர் பொருட்டு விதிகளைத் தளர்த்த கீழ்க்காணும் நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
i சம்மந்தப்பட்ட அரசு அலுவலர் 53 வயதிற்குக் குறையாதவராக இருக்க வேண்டும்.

தொடர்புடைய அரசு அலுவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும்.

இதற்கு அத்தாட்சியாக தொடர்புடைய துறை சிறப்பு தேர்வினை ஐந்து தடவைகள் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வுகள் எழுதியதற்கான விண்ணப்பதாரரின் அனுமதிக் குறிப்பாணையுடன் (Hall tickets) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் மேற்படி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேராதவர்கள் ஆகிய விவரப் பட்டியல் (Detailed Results) அடங்கிய அரசுப் பணியாளர் தேர்வாணையச் செய்தி வெளியீட்டை (Tamil Nadu Public Service Commission Bulletin) வைத்து அனுப்ப வேண்டும்.

அவர் இந்த சலுகையை அடையத்தக்க அளவிற்கு அவருடைய பணிக்குறிப்புகள் மனநிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும்.

2. மேலே மூன்றாவது மற்றும் நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59 மற்றும் 60 ஆக உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தக் கோரும் சலுகையினை அடைய 53 வயதுக்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது நிர்ணயிக்கப்பட்டதாகும்.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அரசாணைகளில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தங்களின்படி, தற்போது அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்த விதிவிலக்கு அளிக்க 53 வயது என்று நிர்ணயித்துள்ளதை 55 வயதாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகளுக்கிணங்க, மேலே ஒன்றாவதாக மற்றும் இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணை மற்றும் அரசுக் கடிதத்தினைப் பின்பற்றி கீழ்க்கண்ட ஆணையினை அரசு வெளியிடுகிறது. "சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் ஒரு அரசு அலுவலர் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க அவர் பொருட்டு விதிகளைத் தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.

i சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் 55 வயதிற்குக் குறையாதவராக

இருக்க வேண்டும்.

ii. தொடர்புடைய அரசு அலுவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு அத்தாட்சியாக, தொடர்புடைய துறை / சிறப்பு தேர்வினை ஐந்து தடவைகள் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வுகள் எழுதியதற்கான விண்ணப்பதாரரின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் (Hall tickets) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் மேற்படி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேராதவர்கள் ஆகிய விவரப்பட்டியல் (Detailed Results) அடங்கிய அரசுப் பணியாளர் தேர்வாணையச் செய்தி வெளியீட்டை (Tamil Nadu Public Service Commission Bulletin) வைத்து அனுப்ப வேண்டும்.

iii. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் இந்த சலுகையை அடையத்தக்க அளவிற்கு அவருடைய பணிக்குறிப்புகள் மனநிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும்.

3 மேலே பத்தி 2ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை, சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்க விதிகளை தளர்த்தக் கோரும் கோரிக்கைகளை பரிந்துரை செய்யும்போது கருத்தில் கொள்ளுமாறு அனைத்துத் தலைமைச் செயலகத் துறைகள் மற்றும் துறைத் தலைமைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.