குழந்தைகள் கல்விக்கு உதவும் மிலியூ கல்விமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 3, 2023

குழந்தைகள் கல்விக்கு உதவும் மிலியூ கல்விமுறை

குழந்தைகள் கல்விக்கு உதவும் மிலியூ கல்விமுறை - A milieu system of education for children

சில குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கும் வயது வரும்போது பேச்சுத் திறன் பாதிக்கப்படும். பேச்சு திக்குதல், பேச்சின் இடையே நாக்கு குழறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். இதுபோன்ற பாதிப்புகள் கொண்ட குழந்தைகளுக்கு மிலியூ (Milieu) கல்வி உதவுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

மேலை நாடுகளில் பிரபலமான இந்த மிலியூ கல்விமுறை மூலமாக எல்கேஜி, யூகேஜி பயிலும் மூன்றரை வயது குழந்தைகள் பலர் பலன் அடைந்து வருகின்றனர். ஆட்டிஸம், டிஸ்லெக்ஸியா, திக்குவாய் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் கொண்ட குழந்தைகளுக்கு மிலியூ கல்வி சிறந்த தீர்வாக அமைகிறது. மிலியூ கல்விமுறையில் எழுத்துமூலம் வார்த்தைகள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை. இதற்கு மாறாக குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளிடம் காட்டப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. மிதமான கண்பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்புகொண்ட குழந்தைகளுக்குக்கூட தற்போது மிலியூ கல்வி உதவுகிறது என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சிலருக்கு எழுத்துகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். இவர்களுக்கு வார்த்தைகளுக்கு பதிலாக பல்வேறு வடிவங்களில் உள்ள பொம்மைகள் காண்பிக்கப்பட்டு பாடம் எடுக்கப்படும். மேலும் எழுத்துக் கல்விக்கு மாற்றாக இவர்களுக்கு நேரடிக் கல்வி அளிக்கப்படும். இதனால் இவர்கள் எளிதில் உலக அறிவை அடைவர். இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளிலும் மிலுயூ கல்விமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.