confusing order of school education department - பள்ளிக் கல்வி துறையின் குழப்பமான உத்தரவால் ஒரு பள்ளி மீது அதிகாரம் செலுத்த 2 அதிகாரிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 1, 2023

confusing order of school education department - பள்ளிக் கல்வி துறையின் குழப்பமான உத்தரவால் ஒரு பள்ளி மீது அதிகாரம் செலுத்த 2 அதிகாரிகள்

2 officers to exercise authority over a school by confusing order of school education department - பள்ளிக் கல்வி துறையின் குழப்பமான உத்தரவால் ஒரு பள்ளி மீது அதிகாரம் செலுத்த 2 அதிகாரிகள்



பள்ளிக் கல்வித்துறையின் குழப்பமான உத்தரவால் ஒரு பள்ளிக்கு 2 வட்டாரக் கல்வி அதிகாரிகள் அதிகாரம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் குறிப்பிட்ட பள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளை அவர்கள் கருவூலத்தின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் அடிப்படையில் மென்பொருளில் ஏற்றி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்றனர்.

தற்போது குறுவள மையத்தில் பயிற்சி பெறும் பள்ளிகள் அடிப்படையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனடிப்படையில் கருவூலத்தின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்ட மென்பொருளில் பள்ளிகளை மாற்றம் செய்யவில்லை. நிர்வாகத்தில் குழப்பம்:

இதனால் ஒரு பள்ளிக்கு ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு க்கும், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மற்றொரு வட்டாரக் கல்வி, ஊதியம் வழங் கும்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு இரண்டு அதிகாரிகள் அதிகாரம் செலுத்துவதால், யார் சொல்வதைக் கேட்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆய்வு:

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:ஏற்கெனவே வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் அடிப்படையில் குறு வள மையங்களை உருவாக்கினால் இந்த குழப்பம் ஏற்படாது.

ஆனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக் குநர் குறுவள மையங்கள் அடிப்படையில் வட்டாரக் கல்வி அலு வலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தேவை யில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தீர்க்க வலியுறுத்தி வரும் நிலையில், சிவகங்கை வட்டாரத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.