தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்: 26.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 26, 2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்: 26.04.2023



தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்: 26.04.2023

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு 15.03.2023 அன்றுள்ளவாறு தகுதியுடைய உதவியாளர்களின் உத்தேச தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடுதல் - சார்ந்து.

1. அரசாணை எண்.707, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.03.07.1981.

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் பார்வை: தொகுதி) செயல்முறைகள் இதே எண். நாள். 27.02.2023. 3. சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்.

பார்வை (2)இல் காணும் இவ்வாணையரக செயல்முறைகளுக்கிணங்க. பார்வை (3)ல் குறிப்பிட்டுள்ள சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த உதவியாளர்களின் உத்தேச தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் (15.03.2002 முதல் 15.03.2012 முடிய இளநிலை உதவியாளர் தேர்ந்தோர் பட்டியலில் இடம் பெற்று உதவியாளராகப் பதவி உயர்வு பெற்று பணியில் சேர்ந்தவர்கள் சார்பாக) 15.03.2023 அன்றுள்ளவாறு உத்தேசமாகத் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இப்பெயர்ப்பட்டியலை அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து ஒப்புதல் பெற்று. அவற்றில் சேர்க்கை / திருத்தம் / நீக்கம் ஏதேனுமிருப்பின் அதன் விவரத்தினை 12.05.2023க்குள் தெரிவிக்குமாறும், பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனைக்காலம் நிலுவையிலுள்ளவர்கள் மற்றும் மாறுதலில் சென்றவர்கள், தகவலின்றி நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்கள், ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பதவி உயர்வினை தற்காலிக/ நிரந்தர உரிமைவிடல் செய்தவர்கள் எவரேனும் இருப்பின் அதன் விவரத்தினை உடன் தெரிவிக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இயக்ககங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேற்கண்ட சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அத்தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.