6-9 வகுப்பு மாணவர்களுக்கு தபால் கார்டில் ரிசல்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 26, 2023

6-9 வகுப்பு மாணவர்களுக்கு தபால் கார்டில் ரிசல்ட்



தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் சுமார் 32 ஆயி ரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 28ம் தேதி வரை பள்ளி வேலை நாட்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், 28ம் தேதி வரை பள்ளிகளை நடத்தி, ஆண்டுத்தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6 முதல் 9ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்டுவது வழக்கம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வெயில் அதிகரிப்பு காரணமாகவும், விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் வெளியூர் செல்ல வேண்டியுள்ளதாலும், மாணவர் கள் பள்ளிகளுக்கு நேரடியாக வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மாணவர்களின் வீட்டு முகவரிக்கே தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கள் சுயமுகவரியிட்ட தபால் கார்டு அல்லது உறைகளை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவுகளை மே 8ம் தேதிக்குள் வெளியிட உள்ளதால் சுயமுகவரியிட்ட தபால்கார்டு, உறைகளை பள்ளிக ளில் மாணவர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.