3 ஆண்டுகளாக முடங்கிய இலவச லேப்டாப் திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 15, 2023

3 ஆண்டுகளாக முடங்கிய இலவச லேப்டாப் திட்டம்



Free laptop program that has been disabled for 3 years - 3 ஆண்டுகளாக முடங்கிய இலவச லேப்டாப் திட்டம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' வழங்கும் திட்டம், மூன்று ஆண்டுகளாக முடங்கி உள்ளது. இலவச நலத்திட்ட பட்டியலில் இருந்து, லேப்டாப்பை நீக்க முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்த உயர்கல்விக்கு செல்லும் வகையில், அவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், ஐந்து லட்சம் மாணவர்கள் வரை லேப்டாப் பெற்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலான, 2020ம் ஆண்டு முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், 2020 - 21, 2021 - 22 மற்றும் நடப்பு, 2022 - 23ம் கல்வி ஆண்டுகளில் படித்துள்ள, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு, மாணவ - மாணவியர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், லேப்டாப்களை மீண்டும் வழங்குவது பற்றி, அரசு தரப்பில் தகவல் எதுவும் வரவில்லை என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இலவச திட்ட பட்டியலில் இருந்து லேப்டாப் வழங்கும் திட்டத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதில் குறைந்த நிதியில் நிறைவேற்றும் டேப்லெட் என்ற கையடக்க கணினி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, அரசு திட்டமிட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.