TET பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 4, 2023

TET பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

TET பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு Exam Notification for TET Recruitment - Commissioner of School Education Notification

2012ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2ல், 15 ஆயிரத்து 297 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தாள்-1ல், 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங்கேற்றனர். அதில் 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை (எண்149) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்துக்குள் வெளியிடப்படும். அதற்கு பிறகு தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் கூறிய பாடத்திட்டங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 10 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. இது தவிர, வட்டாரக் கல்வி அலுவலர், கல்லூரி உதவிப் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வதற்கான போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பும் மே மாதம் வெளியிடப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.