ஆசிரியர்களின் பொறுமைக்கு EMIS என்ற சோதனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 1, 2023

ஆசிரியர்களின் பொறுமைக்கு EMIS என்ற சோதனை



*ஆசிரியர்களின் பொறுமைக்கு ஓர் EMIS என்ற சோதனை*

*பள்ளிக் கல்வித் துறையால் கனவு ஆசிரியர் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது*

*கல்வி அமைச்சரும் voice call மூலம் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.* *அதற்காக அனைத்து தரப்பு ஆசிரியர் ஆசிரியைகளும் விண்ணப்பித்து ஏப்ரல் 1ஆம் தேதி காலை 11:30 மணி முதல் 12 15 முடிவு 45 நிமிடம் தேர்வு எழுதுவதற்கு அவரவர் மொபைல் போன் , மடிக்கணினி போன்றவற்றை தயார் நிலையில் இணைய வசதியுடன் இணைப்பில் இணைத்துக் காத்திருந்தனர்*

*ஆனால் இந்த 45 நிமிடமும் தமிழ்நாடு முழுவதும் 99 சதவீத ஆசிரியர் ஆசிரியர்களுக்கு தேர்வு லிங்க் ஓபன் ஆகவில்லை.*

*இதனால் கடும் மன உளைச்சலில் ஆசிரியர்கள் இணையதளத்தை பலமுறை சொடுக்கிப் பார்த்து சோர்வடைந்து , மன உளைச்சல் அடைந்துள்ளனர்*

*மீண்டும் இந்த தேர்வு எப்பொழுது வைக்கப்படும் என்று எதிர்நோக்கி உள்ளனர்*

*ஆசிரியர்களுக்கு எந்த அளவு பொறுமை உள்ளது என்பதை அறியும் சோதனையாக நடந்து முடிந்தது. பெரும் வேதனையான நிகழ்வு*

*கடந்த முறை கலந்தாய்வு மாறுதலின் போதே EMIS ன் திறன் சந்தி சிரித்து மூன்று நாட்களில் முடிய வேண்டிய மாறுதல் மூன்று மாதங்கள் ஆசிரியர்களை அலைக்கழைத்து கல்வித்துறைக்கு பெருமை சேர்த்தது.* *தினந்தோறும் வருகைப் பதிவு செய்யும் போது P அல்லது A என்ற ஒற்றை எழுத்தை EMIS சர்வரில் பதிவேற்ற ஆசிரியர்கள் படாத பாடு பட வேண்டியுள்ளது.*

*அப்படியிருக்க அந்த திறனற்ற சர்வரைக்கொண்டு பல இலட்சம் ஆசிரியர்களுக்கு கனவுஆசிரியர் திறனறி தேர்வு வைப்பதெல்லாம் கனவுத் திட்டமாக இருக்குமே தவிர நடைமுறைச் சாத்தியமில்லாத திட்டம்.*

*மீண்டும் மீண்டும் EMIS சர்வரின் திறன் பற்றியோ ஆசிரியரின் எண்ணிக்கை பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லாமல் இது போன்ற திட்டங்களை அறிவிக்கும் உயர்அதிகாரிகள் களஅனுபவம் சிறிதும் இல்லாத அல்லது அதைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத கற்பனைவாதிகளாகத்தான் இருப்பார்கள்.பல இலட்சம் ஆசிரியர்களின் நேரத்தை வீணடித்தவர்களை மனிதவளத்துறையான கல்வித்துறையில் தொடர்ந்து பணியாற்றச் செய்வது துறையை சீரழிக்குமே தவிர சீராக்காது.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.