குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தகராறில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை - Dismissal of 2 teachers involved in dispute in Govt High School - Action by Principal Education Officer
திருப்பத்தூர். ஏப்.13- திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 25-க்கும் அதிகமான ஆசி ரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசி ரியராக குழந்தைசாமி உள்ளார்.
கடந்த 29-ந் தேதி பள்ளியின் கால அட்டவணை தயாரிப் புதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடந்தது. அப்போது வேதியியல் ஆசிரியர் சின்னமணி, இயற்பியல் ஆசிரியர் கோவிந்தசாமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆபாச வார்த்தைகளால் இருவரும் திட்டிக்கொண்டதுடன், இருவரும் கட்டிப்புரண்டுள்ளனர்.
மற்ற ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி பிரித்து வைத்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் மதன்குமாருக்கு புகார் சென்றது. அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி இரு ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன் குமார் கூறுகையில், கால அட்டவணை தொடர்பான ஆலோ சனைக் கூட்டத்தில் சண்டையிட்டுக் கொண்ட சின்னமணி, கோவிந்தசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர் குழந்தைசா மியிடம், இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.