இடைநிலை ஆசிரியர்களின் 13 ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 25, 2023

இடைநிலை ஆசிரியர்களின் 13 ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரிக்கை!

இடைநிலை ஆசிரியர்களின் 13 ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் கோரிக்கை


கரூரில் நேற்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூர் மாவட்ட 6 புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா மற்றும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராபர்ட், மாநில பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசி ரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 எனவும் 1.6.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை எந்தவொரு ஊதி யக்குழுவிலும் ஒரே பதவி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்போது இருவேறு ஊதியங்கள் நிர்ணயித்ததில்லை.

தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 13 ஆண்டுகாலமாக ஏற்பட்டுள்ள இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழக கல்வி தரத்திற்கு அடித்தளமாக விளங்கும் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும், சமவே லைக்கு சமஊதியம் கோரிக்கை வெல்லும் வரை உறுதியாக போரா டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜூ, பொருளாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இடைநிலை ஆசிரியர்களின் 13 ஆண்டு கால ஊதிய முரண் பாட்டை சரி செய்ய வேண்டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் கள் இயக்கம் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய 6 வட்டாரங்களில், இயக்கத்தின் புதிய கிளை தொடக்க விழா, கரூரில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.

மாநிலப் பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ராபர்ட், பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத் தார்.

கரூர் மாவட்டத் தலைவர் டது. செந்தில்குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பிரபு நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் நாகராஜு செய்திருந்தார்.

கூட்டத்தில், “2009, ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 எனவும், அதன்பிறகு நியமிக்கப் பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 எனவும் நிர்ணயிக்கப்பட் 13 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த ஊதிய முரண் பாட்டை அரசு சரிசெய்ய வேண் டும்" என்பது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.