4,5-ஆம் வகுப்பு வினாத்தாள் இணையத்தில் பதிவேற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 12, 2023

4,5-ஆம் வகுப்பு வினாத்தாள் இணையத்தில் பதிவேற்றம்

4,5-ஆம் வகுப்பு வினாத்தாள் இணையத்தில் பதிவேற்றம்

பள்ளிகளில் 4,5 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வை நடத்துவதற்கு மாநில கல் வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப் பட்ட வினாத்தாள்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சி இஆர்டி) 4,5-ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவி யல்,சமூகஅறிவியல்ஆகியபாடங்க ளுக்கான மூன்றாம் பருவத்தொகுத் தறி மதிப்பீட்டுக்கான வினாத்தாள் கள், அதற்கான விடைக்குறிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை பதிவிறக்கம் செய்யத் தக்க வகையில் https://emistmschoolsgov.in/login, https://examstnsehoolsgov.in/login ஆகிய இணைப்புகளில் ஏப்.13-ஆம் தேதி (வியாழக்கிழமை)பதிவேற்றம் செய் யப்படவுள்ளது.

இதை பள்ளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல் லைப் பயன்படுத்தி பதிவிறக் கம் செய்யலாம். மேலும், கைப் பேசியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பிடி எஃப் வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத் தாள்களையோ அல்லது பள்ளி களில் ஆசிரியர்களே தயாரிக்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத் தாள்களையோ கொண்டு சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்கள், மாவட்டக் கல்வி அலுவ லர்கள் தேர்வை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.