தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 2022-2023 ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - 11.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 11, 2023

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 2022-2023 ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - 11.04.2023

திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 2022-2023 ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

திருச்சிராப்பள்ளி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - 11.04.2023

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 04 ஆம் வகுப்பு முதல் 08 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2022 -2023 ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத் தேர்வுகள் கீழ்காணும் அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெற வேண்டும் என அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம் . அவ்வாறு நடத்தப்படும் எழுத்துபூர்வமான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது (Only Optional) இம்மதிப்பீட்ற்கான மதிப்பெண்கள் எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்ய தேவையில்லை. தொகுத்தறி மதிப்பீடு 17.04.2023 அன்று நடைபெறவிருப்பதால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான இறுதி கட்டகத்திற்கான வளறறி மதிப்பீடு FA(b) -யினை 13.04.2023 க்குள் முடிக்குமாறும்,மேலும் வளறறி மதிப்பீடு FA(a) -க்கான மதிப்பீட்டினை செயலியில் 21.04.2023 க்குள் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே மூன்றாம் பருவத்திற்கான வளறறி மதிப்பீடு FA(a) , FA(b) மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டினை அனைத்து பள்ளிகளிலும் 01 முதல் 03 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 17-04-2023 முதல் 21.04.2023 வரை நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் தெரிவித்திட வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் பார்வை(2) மற்றும் 3-ல் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி / நகராட்சி மாநகராட்சி துவக்கப் பள்ளிகளில் உள்ள 04 முதல் 05 ஆம் வகுப்புகளுக்கு EMIS இணையதளத்தில் PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாத்தாள்களையோ, அல்லது பள்ளியளவில் ஆசிரியர்களே தயாரிக்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களை கொண்டு தேர்வினை தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட வட்டாரக் கல்வி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். நடத்திட சார்ந்த பள்ளித் அலுவலர்கள் திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத்தாள்களை பொறுத்தவரை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முறைகளை பின்பற்றிட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட வட்டாரக் கல்வி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். அலுவலர்கள் மேலும் திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 06 முதல் 08 ஆம் வகுப்புகளுக்கு EMIS இணையதளத்தில் PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாத்தாள்களையோ, அல்லது பள்ளியளவில் ஆசிரியர்களே தயாரிக்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களை கொண்டு தேர்வினை நடத்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மேற்காண் விவரங்களின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வினை சிறப்பான முறையில் நடத்திடவும் இக்கல்வியாண்டில் பள்ளி கடைசி வேலை நாள் 29.04.2023 என்பதையும் அனைத்து வகை தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.