பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 9, 2023

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி

Eligibility criteria for promotion under CAS in terms of guiding Ph.D. Scholars - PDF

This has reference to the queries from various StakeholdersAlniversities seeking clarifications with regard to the terms of eligibility criteria for guiding Ph.D. Scholars. In this connection, the Commission (UGC) in its 565th meeting held on 20ft January,2023, discussed the eligibility criteria for guiding Ph.D. scholars and resolved as under: "Eligible permanent faculty members can guide Ph.D. scholars during their probation period also."

All the Universities are requested to comply with above said decision of the Commission OGC)

CLICK HERE TO DOWNLOAD PDF பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட முடியாது; பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே, வழிகாட்டுனராக பணியாற்ற முடியும்.

இந்த விதிமுறையால், பிஎச்.டி. வழிகாட்டுனரின் எண்ணிக்கை குறைந்து, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உயர் கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் பயிற்சி காலத்திலும், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.