தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் - அரசுத்தேர்வுத்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 29, 2023

தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் - அரசுத்தேர்வுத்துறை உத்தரவு

தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் - தமிழ்கத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என அரசுத்தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தியால் மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ல் தொடங்க உள்ளது கவனிக்கத்தக்கது



The Joint Director of Government Examinations ordered that the District Education Officers should give concessions to the candidates who request concessions at the time of examination due to unexpected accidents and other reasons!

எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் தேர்வர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களே சலுகைகள் வழங்க அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!

நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 இடைநிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இதுநாள் வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் / எதிர்பாராத விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள், மருத்துவச் சான்றிதழ்களின் அடிப்படையில் சூழ்நிலைக் கேற்றவாறு முடிவு செய்து, தேர்வு நேரத்தில் சலுகைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் இனங்களில் மருத்துவ சான்றிதழ்களில் ஏதேனும் ஐயம் ஏற்படின், அதற்குரிய கூடுதல் ஆவணங்களை தேர்வெழுதிய பின்னர் சமர்ப்பிக்க அறிவுறுத்துமாறும், அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தேர்வர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவித்து, சலுகைகள் வழங்கப்பட்ட தேர்வர்களின் விவரங்களை பின்னேற்பாணை பெறும் பொருட்டு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் வழியாக இவ்வலுவலகத்திற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.