ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு திறன் பயிற்சி - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 26, 2023

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு திறன் பயிற்சி - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு திறன் பயிற்சி - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்

சென்னை, மார்ச் 25: பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற உதவும் திறன் பயிற்சிகள் அரசின் சார்பில் வழங் கப்படவுள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கல்லூரிகளில் இறு தியாண்டு இளநிலை, முதுநிலை பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குகல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான தகுதித்தேர்வுகளை எதிர்கொள்ளமொழி திறன், திறனறிவு தேர்வுகள், குழு விவாதம் ஆகியவை குறித்த பயிற்சிகள் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அந்த மாணவர்களுக்கு 'ஆம்ப்கேட்' (அஸ்பயரிங் மைன்ட்ஸ் கம்ப்யூட்டர் அடாப்டபிளிட்டி) பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திறன் பயிற்சிகள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் வழங்கப்படவுள்ளது. எனவே, பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 'ஆம்ப்கேட்' பயிற்சி யில் சேர ஜாதி சான்று, ஆதார் அட்டை, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் கடைசியாக நடைபெற்ற பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றுடன் www.tahdco.com என்ற இணையதளத் தில் ஆம்ப்கேட் டிரெயினிங்' என்ற பயிற்சி பிரிவில் பதிவு செய்து, குறிப் பிட்ட ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு அனைத்து கல்லூரி முதல் வர்களும் தங்களது மாணவர்களுக்கு உதவ வேண்டும். மேலும், பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை socdcdote@y ahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.