மாணவர் ஆப்சென்ட் விவகாரம்: மானியத்திற்காக மறைத்ததா கல்வித்துறை
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன விவகாரத்தில் அரசு நலத் திட்டம், மத்திய அரசு மானியம் பெறுவதற்காக மாணவர் இடைநிற்றலை கல்வித்துறை மறைத்ததா' என கேள்வி எழுந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வை எழுத தமிழகத்தில் 8 லட்சத்து 36,593 மாணவர்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல் தேர்வான தமிழில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. நேற்று நடந்த ஆங்கிலத் தேர்விலும் ஆப்சென்ட் எண்ணிக்கை இதே நிலையில் தான் இருந்தது. இதுவரை மாவட்டம் வாரியாக இரண்டு இலக்கங்களில் இருந்த 'ஆப்சென்ட்' எண்ணிக்கை, இந்தாண்டு நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் எண்ணிக்கையால் நான்கு இலக்கத்திற்கு உயர்ந்தது.
இந்த 'ஆப்சென்ட்' விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'நலத் திட்டங்கள், மத்திய அரசு மானியத்தை தொடர்ந்து பெற 'நாமினல் ரோலில்' வேண்டுமென்றே இடைநிற்றல் மாணவர்களை கல்வித்துறை சேர்த்துள்ளதா' என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், புத்தகம், நோட்டு, சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், பள்ளி மானியம், கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களை அரசு வழங்குகிறது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு தோறும் மத்திய அரசும் பல கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் மத்திய அரசு மானியம் குறையும் என்பதால் இடைநிற்றல் மாணவர் எண்ணிக்கையை குறைக்க கல்வித்துறை மாவட்டம் வாரியாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து வருகிறது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசின் மாணவர் திட்ட நிதிகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2ல் பொதுத்தேர்வு என்பதால் மாணவர் 'ஆப்சென்ட்' எண்ணிக்கை வெளியே தெரிந்துவிட்டது.
இதிலேயே இவ்வளவு என்றால் பிற வகுப்புகளில் நிலைமை என்னவாக இருக்கும். 'ஆப்சென்ட்' மாணவர்கள் நலத் திட்டங்களை பெற்றனரா, மத்திய அரசு மானியத்தை அவர்கள் பயன்படுத்தினரா என்பது குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும், என்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.