தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமா? - மத்திய அமைச்சர் விளக்கம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமா? - மத்திய அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமா? - மத்திய அமைச்சர் விளக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13ம் தேதி) துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு இன்று துவங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.  
இதற்குப் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 15 பள்ளிகளில் மட்டுமே தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 63,809 மாணவர்களில் 6,589 மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் உருவாக்கும் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களைக் கருத்தில் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுவதால் கூடுதல் மொழியாக மட்டுமே மாநில மொழிகள் பயிற்றுவிக்கப்படும். 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே மாநில மொழி பயிற்றுவிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.