ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 1, 2023

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சி

சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு (எஸ்எஸ்சி, எம்டிஎஸ், எஸ்எஸ்சி சிஜிஎல், எஸ்எஸ்சி சிஎச்எஸ்எல், எஸ்எஸ்சி.ஜெ) 2023ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் //ssc.nic.in வெளியிடப்பட்டுள்ளது. 11,000 காலியான அரசு பணியிடங்கள் இத்தேர்வு மூலம் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற வெரன்டா ரேஸ் நிறுவனத்துடன் இணைந்து தாட்கோ மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக 18,000 முதல் 22,000 வரை பணியமர்த்தப்படுவார்கள். இந்த தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும். அல்லது 044-25246344 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.