தொலைநிலை கல்விக்கு UGC அங்கீகாரம்: மார்ச் 15ம் தேதி முதல் விண்ணப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

தொலைநிலை கல்விக்கு UGC அங்கீகாரம்: மார்ச் 15ம் தேதி முதல் விண்ணப்பம்

தொலைநிலை கல்விக்கு UGC அங்கீகாரம்: மார்ச் 15ம் தேதி முதல் விண்ணப்பம்

பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர்கல்வி நிறுவனங்கள், திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியிலும், ‘ஆன்லைன்’ வழியிலும், பட்டப் படிப்புகளை நடத்த, யுஜிசியில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். 2023-24ம் கல்வியாண்டில், பல்கலை கழகங்கள் தொலைநிலை படிப்பை நடத்த, வரும் 15ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை https://deb.ugc.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பட்டப்படிப்புகளோடு கூடுதலாக பாடப்பிரிவுகள் துவங்க விரும்பினால் அதனையும் குறிப்பிட வேண்டும்.
இணையதளம் வழியே விண்ணப்பித்த பின், அதன் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அசல் உறுதிமொழிக் கடிதம் ஆகியவற்றுடன், இணை செயலாளர், தொலைதூரக் கல்விப் பணியக முகவரிக்கு ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள், யுஜிசிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பம் அளிப்பதால் மட்டும் அங்கீகாரம் கிடைத்ததாக கருத கூடாது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.