பழைய ஓய்வூதியத் திட்டம்: ரகுராம் ராஜன் எதிர்ப்பு Old Pension Scheme: Raghuram Rajan Opposition - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

பழைய ஓய்வூதியத் திட்டம்: ரகுராம் ராஜன் எதிர்ப்பு Old Pension Scheme: Raghuram Rajan Opposition

பழைய ஓய்வூதியத் திட்டம்: ரகுராம் ராஜன் எதிர்ப்பு Old Pension Scheme: Raghuram Rajan Opposition



பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க சில மாநில அரசுகள் திட்டமிட்டி ருப்பது குறித்து விமர்சித்துள்ள ரிசர்வ் வங் கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஓய்வூதியத்தாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைந்த செலவிலான மாற்று வழிகளை அரசு கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நடப்பு சம்பளத்தின் அடிப்ப டையில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் படுத்தப்பட்டால் வரும் காலங்களில் அது கூடுதல் செலவினமாக மாறும் எனவும் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசு ஊழி யர்களுக்கு அவர்கள் இறுதியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. அதிகரிக்கும் நிதி செல வினங்களைக் கருத்தில் கொண்டு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதுக்கான முன்னோட்டங்கள் நடந்து வரு கின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், ‘ஓய்வூதியத்தாரர்களின் நலனுக்காக செலவிடுவது அரசின் பெரும் பொறுப்பாக உள்ளது. ஆனால், குறுகிய காலத்துக்காக அதை திட்டமிடக்கூடாது. அரசு நிதியைப் பயன்படுத்தும்போது நீண்ட காலத்துக்கான அதன் தாக்கம் குறித்து சிந்திக்க வேண்டும். அரசின் ஆதரவு தேவைப்படும் மக்கள் இடையே அரசு ஊழியர் பிரிவினர் அடங்குவார்களா என்பது குறித்து ஆராய கள் என்னும் வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத் துவது தொழில்நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சாத்தியமற் றதாக கூட மாறலாம். எனவே, ஓய்வூதியத்தாரர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குறைந்த செலவிலான மாற்று வழிகளைஅரசு விரைவில் கண்டறிய வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.