அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட (IFHRMS Post Id பெறப்பட்ட) விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட (IFHRMS Post Id பெறப்பட்ட) விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட (IFHRMS Post Id பெறப்பட்ட) விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Order from Joint Director of School Education seeking details of Post Graduate Teacher Vacancies (IFHRMS Post Id received) in Government Higher Secondary Schools அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் நிலை-1/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களில் IFHRMS-ல் பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை எண் பதிவேற்றம் செய்யப்பட்டு Post Id பெறப்பட்ட பணியிடங்கள் சார்ந்த விவரத்தினை காலிப்பணியிடங்கள் உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, எந்த பணியிட விவரமும் விடுபடவில்லை என முதன்மைக்கல்வி அலுவலரின் சான்றொப்பத்துடன் 27.03.2023 க்குள் இவ்வாணையரகத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பணியிடம் ஏதும் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுப்பட்டு, ஊதியம் பெற்று அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

//இது மிக மிக அசவரம்//



CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.