தூத்துக்குடி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

தூத்துக்குடி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை

தூத்துக்குடி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை

A statement on behalf of the Tamil Nadu Government Employees Teachers Welfare Organization expressing gratitude to the Hon'ble Chief Minister of Tamil Nadu for arresting and taking action under the Thug Act against the attacker of Tuticorin Headmaster and teacher.

நன்றி ! நன்றி !! நன்றி !!!

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி

தூத்துக்குடி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - நிறுவனத் தலைவர் - சா.அருணன்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து துவக்க பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாரத் அவர்களை அடித்து உதைத்த அப்பள்ளியில் படிக்கும் மாணவன் பிரகதீஸ் அவர்களின் தந்தை சிவலிங்கம் அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் என்ற செய்து மிகவும் பாரட்டிற்கு உரியது வரவேற்க தக்கது மாணவர்கள் ஆசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த நடவடிக்கை எடுத்திருப்பது வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்பதற்கான முன்னோட்டமாக கருதுகிறோம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று கடும் நடவடிக்கை எனுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மேலும் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து ஆசிரியர் மாணவர் நலன்காக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.