திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 30, 2023

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Proceedings of Tiruchirappalli District Primary Education Officer uhh திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 20232024 - எண்ணும் எழுத்து சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான பயிற்சி - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிடுப்பு செய்து பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் சாரிபு-

பார்வை:

1இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனரின் செயல்முறைகள்.நக.எண். 2411/ ஊ2 / 2021. நாள்: 20.032023 2.பள்ளிக்கல்வித் (ERT)துறை அரசாணை எண் 147 நாள் : 2210.2021 3. முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குமுளூர், திருச்சி அவர்களின் whatsapp செய்தி நாள்: 28.03.2023

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எண்ணும் எழுத்தும் சார்ந்து 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பார்வையில் காணும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1 முதல் 3 வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் முதல் பருவத்திற்கான பயிற்சிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி பில்லர் பயிற்சி மையம், நாகமலை புதுக்கோட்டை மதுரை மாவட்டத்தில் 05.04.2023 அன்று கணிதப் பாடத்திற்கும், 6,04.2023 அன்று ஆங்கிலப் பாடத்திற்கும், 08.04.2023 அன்று தமிழ்ப் பாடத்திற்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் முதன்மை கருத்தாளார்களாக செயல்பட உள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் பாடவாரியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அட்டவணையில் பெயர் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அவரவர் பாடத்திற்குரிய பயிற்சி நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்து அனுப்பிடுமாறு சம்மந்தப்பட்ட குறுவளமைய தலைமையாசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி முடிவடைந்தபின் மாவட்ட அளவில் 06.04.2023 அன்று கணிதப்பாடத்திற்கும், 08.04.2023 அன்று ஆங்கிலம் மற்றும் 10.04.2023 அன்று தமிழ் பாடத்திற்கான திட்டமிடல் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே முதன்மைக்கருத்தாளர்கள் முன்திட்டமிடல் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.