31.03.2023 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் Grand Employment Camp on 31.03.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 24, 2023

31.03.2023 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் Grand Employment Camp on 31.03.2023

31.03.2023 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் Grand Employment Camp on 31.03.2023


கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 31.03.2023 அன்று நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தகவல். கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ், மாபெரும் தனியார் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் 31.03.2023 அன்று ஒசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், (அரசு அரசு ஐ.டி.ஐ பின்புறம்) நடைபெறுவது முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (24.03.2023) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 31.03.2023 அன்று (வெள்ளிக்கிழமை) ஒசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், (அரசு அரசு ஐ.டி.ஐ பின்புறம்) நடைபெற உள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச்சான்று, ஆதார்கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். மேலும், இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு குறித்து பதிவு செய்தல், ஆதார் எண்ணை தேர்தல் அடையாள அட்டையுடன் இணைத்தல், பல்வேறு திட்டத்தின் கீழ் திறன் வளர்ச்சி பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு மற்றும் வங்கி கடன் பெற ஆலோசனை ஆகியவைகளுக்கும் தனித்தனியே அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.