CBSE Warning to Schools - பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 18, 2023

CBSE Warning to Schools - பள்ளிகளுக்கு CBSE எச்சரிக்கை!!

பாடங்களை முன்கூட்டியே நடத்தாதீர் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக நடத்தக்கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பள்ளிகளை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முறையே மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 5ம் தேதிகளில் நிறைவடைய உள்ளன.

இந்நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை இப்போதே நடத்த துவங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, அடுத்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை நடத்த துவங்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, சி.பி.எஸ்.இ., அமைப்பின் செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுஉள்ளதாவது:

சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை முன்கூட்டியே நடத்த துவங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இது, மாணவர்களின் கற்றல் திறனை பாதிப்பதுடன், அவர்களுக்கு கவலையையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

எனவே, திட்டமிட்ட கல்வித் திட்டத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1க்குப் பின் தான் அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை நடத்த வேண்டும். இதை, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.